‘ராஜதந்திர மோதல்’ – ஜேர்மனியிலிருந்து 5000 படையினரை மீளப்பெறுகிறது அமெரிக்கா!
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராஜதந்திர மோதல்களால், அமெரிக்கா ஜேர்மனியிலிருந்து 5,000 துருப்புக்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது.
ஜேர்மன் சான்சலர் மெர்ஸ் , அமெரிக்காவின் போர் யுக்திகளை விமர்சித்த நிலையில், அதற்குப் பதிலடியாக இந்த அதிரடி முடிவை ட்ரம்ப் எடுத்துள்ளார்.
இந்தத் துருப்புக்கள் குறைப்பு அடுத்த ஓராண்டிற்குள் நடைபெறும் என்றும், இது ஐரோப்பாவில் அமெரிக்காவின் இராணுவப் பிரசன்னத்தை 2022-க்கு முந்தைய நிலைக்குக் கொண்டு செல்லும் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.
தங்கள் பிராந்திய பாதுகாப்புப் பொறுப்புகளை ஐரோப்பிய நாடுகளே ஏற்க வேண்டும் என்ற ட்ரம்பின் நீண்டகால நிலைப்பாட்டை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது.
ஜேர்மனி அமெரிக்காவிற்கு வான்வெளி மற்றும் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்திருந்தாலும், தற்போதைய கருத்து வேறுபாடுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் இந்த வெளியேற்றம் நேட்டோ கூட்டணி நாடுகளுக்குள் நிலவும் அழுத்தமான சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





