இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) இரண்டு பிரதான பேரணிகளை நடத்தியுள்ளது.

வடக்கு மாகாண பேரணி முல்லைத்தீவு, மாங்குளத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பேரணி, பட்டிப்பளையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய இராசமாணிக்கம் சாணக்கியன் , புதிய அரசியலமைப்பு கட்டமைப்பின் ஊடாக நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் தமது பாரம்பரிய வாழிடப் பிரதேசங்களை தாமே நிர்வகிக்கும் உரிமையை வழங்குவது, விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடைத் துறைகளில் நீண்டகாலமாக நிலவும் வாழ்வாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!