போர் நிறுத்த காலப்பகுதியில் ஈரான், அமெரிக்கா செய்வது என்ன?
ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்தை இரு நாடுகளும் தங்களின் இராணுவ உத்திகளை மறுபரிசீலனை செய்ய பயன்படுத்திவருகின்றன.
ஏனெனில் அமைதி பேச்சு தோல்வியடைந்தால் எதிர்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட போர் நடவடிக்கைகளுக்கு இரு தரப்பும் தயாராக வேண்டியுள்ளது.
அமெரிக்கா தனது ஏவுகணை வலிமையை அதிகரித்துள்ள போதிலும், நேரடித் தரைப்போருக்கு இன்னும் தயாரில்லை என தெரியவருகின்றது.
மறுபுறத்தில் ஈரான் ஹார்முஸ் நீரிணையை தனது முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
எனினும், சர்வதேசக் கூட்டமைப்பு உருவாகும் பட்சத்தில் ஹார்முஸ் நீரிணையை அந்நாடு திறக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, இரு நாடுகளையும் மீண்டும் அமைதி பேச்சுக்கு அழைத்து வருவதற்குரிய இராஜதந்திர முயற்சியை பாகிஸ்தான் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது.





