அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு சஜித் சவால்!

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.

“ஐக்கிய மக்கள் சக்தி பலவீனமான எதிரணி எனக் கூறுவதற்கு சிலர் முற்படுகின்றனர்.

ஆனால் பலம்பொருந்திய அரசாங்கத்தின் சபாநாயகரை வீட்டுக்கு அனுப்பினோம். எரிசக்தி அமைச்சரை வீட்டுக்கு அனுப்பினோம்.

எனவே, நாம் வலுவாகவே இருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியும் எம்முடன் இணையும்.

இந்த நாளில் ஜனாதிபதிக்கு சவாலொன்றை விடுக்கின்றேன். அதாவது மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றேன்.
அவ்வாறு நடத்தினால் எமது முதலமைச்சர்களின்கீழ்தான் அடுத்த மே தினம் நடத்தப்படும்.” – என்றார் சஜித்.

 

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!