ஐரோப்பா

இஸ்ரேலிய தூதரகத்திற்குள் கத்திகளுடன் நுழைய முயன்ற நபர் குற்றவாளியாக அறிவிப்பு!

லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்குள் கத்திகளுடன் நுழைய முயன்ற நபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குவைத்தில் பிறந்த 34 வயதான அப்துல்லா அல்பாத்ரி (Abdullah Albadri) காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இங்கிலாந்தில் புகலிடம் கோரிய அவர் மீது பயங்கரவாதச் செயல்களுக்குத் தயாரானது மற்றும் இரண்டு கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

காசாவில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்குப் ‘பழிவாங்கும்’ நோக்கத்தில் அவர் செயல்பட்டதாக நடுவர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறையினரின் விசாரணையில்  அவர் இந்த நோக்கத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவரை குற்றவாளி என  தீர்ப்பளித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!