ஐரோப்பா

ஃபாக்லாந்தை உரிமைக் கோர பரிசீலிக்கும் அமெரிக்காவிற்கு பதிலடி!

அர்ஜென்டினாவின் பிராந்திய உரிமைகோரலை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக பென்டகனில் இருந்து கசிந்த ஒரு குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அர்ஜென்டினா ஒரு சுதந்திர நாடாக உருவாவதற்கு சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயர்கள் அந்த தீவுக்கூட்டத்தில் கால்பதித்தனர்.

ஃபாக்லாந்தில் பிறந்த முன்னாள் அரசியல்வாதியான டெஸ்லின் பார்க்மேன் (Teslyn Barkman), னது சொந்த ஊர் “ஒரு உடைமையாகப் பேசப்படுவதைக்” கேட்பது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.

“இந்தக் கருத்து நேரடியாக டிரம்பிடம் இருந்து வந்ததா அல்லது வேறு யாராவது இதை முன்வைத்தார்களா என்பது ஒருபுறம் இருக்க, ஃபாக்லாந்து உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை இங்குள்ள மக்கள் அவருக்குக் காட்ட விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஃபாக்லாண்ட்ஸ் பிரித்தானியாவிற்கு சொந்தமானது என்பதை டவுனிங் தெரு உடனடியாக உறுதிசெய்தது.

தீவுவாசிகளின் சுயநிர்ணய உரிமை “கேள்விக்குரியதல்ல” என்றும், இந்த நிலைப்பாடு “தெளிவாகவும் தொடர்ச்சியாகவும்” கூறப்பட்டுள்ளது என்றும் அது மேலும் கூறியது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!