ஐரோப்பா

நோட்ர டேம் தேவாலயத்தின் ஜன்னல்களை நவீனமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

நோட்ர டேம் தேவாலயத்தின் ஜன்னல்களை நவீனமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கலாச்சார நாசவேலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரெஞ்சு கலைஞர் கிளேர் டபூரே ( Claire Tabouret) உருவாக்கிய புதிய கலைப்படப்புகளை பொருத்துவதற்கு எதிராக 340,000இற்கும் மேற்பட்டோர் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

தேவாலயத்தின் மையப் பகுதியின் தெற்குப் பக்கத்தில் உள்ள ஏழு சிற்றாலயங்களில் ஆறில், யூஜின் வயோலெட்-லெ-டூக் (Eugene Viollet-le-Duc ) வடிவமைத்த தற்போதைய ஜன்னல்களுக்குப் பதிலாக, பெந்தேகோஸ்த் (Pentecost)  காட்சிகளைச் சித்தரிக்கும் நவீன படங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பின்போது சேர்க்கப்பட்ட,  இந்த ஜன்னல்களை அகற்றுவது, வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச உடன்படிக்கையை மீறுவதாகும் என்று எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.

வியோலெட்-லெ-டூக்கின் ஜன்னல்கள் பாரிஸில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  1964 ஆம் ஆண்டு வெனிஸ் சாசனத்தை சுட்டிக்காட்டியுள்ள மக்கள்   அவை நோட்ரே டேமில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!