செய்தி

போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பது அருவருப்பானது – பிரதமர்

போதைப்பொருட்களை முழுமையாக தடை செய்வதை விட அவற்றை சட்டபூர்வமாக்கி அரசின் கட்டுப்பாட்டில் ஒழுங்குபடுத்த வேண்டும் என பசுமைக் கட்சி தலைவர் சாக் போலான்ஸ்கி (Zack Polanski)தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளால் ஐரோப்பாவிலேயே பிரித்தானியாவில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆகவே ஒழுங்குபடுத்தல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய தடுப்பு கொள்கை தோல்வியடைந்துள்ளதாக கூறிய அவர் கடுமையான போதைப்பொருட்கள் மருத்துவ நிபுணர்களின்

கண்காணிப்பில் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கஞ்சா போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டும் அனுமதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த யோசனை குறித்து தொழிலாளர் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) இதை “அருவருப்பானது” என விமர்சித்துள்ளார்.

இதேவேளை, பசுமைக் கட்சி, தங்கள் கொள்கை குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!