மன்னர் அமெரிக்கா செல்வது சரியான முடிவு – சுற்றுச்சூழல் செயலாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது கொலை முயற்சி இடம்பெற்ற போதிலும், மன்னரின் அமெரிக்க அரசுமுறைப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என சுற்றுச்சூழல் செயலாளர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) தெரிவித்துள்ளார்.
அவர் ஸ்கை நியூஸ் (Sky News) இற்கு அளித்த பேட்டியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
மன்னர் அமெரிக்கா செல்வது சரியான முடிவு என்றும், மன்னரையும் ராணியையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பிரித்தானிய பாதுகாப்பு சேவைகள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருவதாகவும் சுற்றுச்சூழல் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த ஹோட்டலில் குற்றம் சுமத்தப்பட்ட துப்பாக்கிதாரி ஒரு அறையை முன்பதிவு செய்ய முடிந்தது மிகவும் கவலையளிப்பதாகவும் ரெனால்ட்ஸ் கூறினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) நேற்று ட்ரம்பை தொடர்புகொண்டு ஒற்றுமையையும் ஆதரவையும் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
மன்னரின் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அவர் மிகவும் பாதுகாப்பாக இருப்பார் என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.





