மன்னர் சார்ள்ஸின் அமெரிக்க விஜயம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு!
அரசுமுறை பயணமாக மன்னர் சார்ள்ஸ் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அவரின் பாதுகாப்பு தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
வாஷிங்டன் இரவு விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து இது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அரசாங்கமும் அரண்மனையும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும், பிரதமர் ட்ரம்பிற்கு தனது ஆதரவுச் செய்தியை அனுப்பியதாகவும் பிரதமரின் தலைமைச் செயலாளர் டேரன் ஜோன்ஸ் (Darren Jones) உறுதிப்படுத்தினார்.
இந்த அரசமுறைப் பயணம், அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறுகிறது.
இதில் மன்னர் சார்ள்ஸ் மற்றும் கமிலா தம்பதியினர், அமெரிக்க ஜனாதிபதி , முதல் பெண்மணியை சந்திக்கவுள்ளனர்.





