அபார வெற்றியுடன் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது சென்னை!
IPL 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், Mumbai Indians அணியை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி Chennai Super Kings வெற்றி பெற்றது.
வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற Mumbai அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
Chennai அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாகத் தொடங்கி 22 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
பின்னர் களம் புகுந்த சஞ்சு சாம்சன், மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
54 பந்துகளில் 101 ஓட்டங்கள் விளாசிய அவர், இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.
சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்றது.
208 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. பவர்பிளே முடிவில் அந்த அணி 29 ஓட்டங்களுக:கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இறுதியில் மும்பை அணி 19 ஓவர்களில் 104 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த அபார வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரன் ரேட்டைப் பெருமளவு உயர்த்தியுள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.





