ஈரான், அமெரிக்கா மீண்டும் பேச்சு நடத்த வேண்டும்: 10 நாடுகள் கூட்டாக வலியுறுத்து!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நிரந்தர போர் நிறுத்த ஏற்பட வேண்டும் என ஆசியான் ASEAN நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்லாபாமாத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையிலேயே மேற்படி வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வர்த்தகத்திற்கு அவசியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆசியான் வெளிவிவகார அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எரிசக்தி இறக்குமதிக்கு ஹார்முஸ் நீரிணை வழியை பெரிதும் நம்பியிருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு சுமூகமான சூழலை ஏற்படுத்துமாறு கோரியுள்ளன.
பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளைப் பாராட்டியுள்ள அமைச்சர்கள், இரு இருநாடுகளுக்கும் இடையில் அமைதி பேச்சு தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
ASEAN என்றழைக்கப்படும் (Association of Southeast Asian Nations) கூட்டணியில் சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து,மலேசியா, இந்தோனேசியா மற்றும் மியன்மார் உட்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





