ஹார்முஸ் நீரிணை முற்றுகை: ஆஸ்திரேலியா போர்க்கொடி!
ஹார்முஸ் நீரிணை முற்றுகையில் இணையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது நாட்டிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese
தெரிவித்தார்.
மேற்படி நடவடிக்கையில் ஆஸ்திரேலியா நேரடியாக பங்கேற்காது எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் மீண்டும் கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, ஹார்முஸ் நீரிணை முற்றுகை தொடர்பான ட்ரம்பின் அறிவிப்புக்கு மேலும் சில நாடுகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.





