ஐரோப்பா

உள்ளாட்சி தேர்தல் – கடும் அழுத்தத்தில் ஸ்டாமர்!

பிரித்தானியாவில் அடுத்த மாதம்  உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த தேர்தலில்  வேட்பாளர்களை நியமிக்கும் விடயத்தில் பிரதமர் கெயர் ஸ்டாமர் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சி அதிகாரிகள் வேட்பாளர்களைத் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், உள்ளாட்சி மன்றக் குழுக்கள் உறுப்பினர்களைத் தங்கள் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாக சில மின்னஞ்சல்கள் கசிந்துள்ளன.

மே மாதத்தில் தொழிலாளர் கட்சி பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளமையால் வேட்பாளர் நியமனம் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

தென்மேற்கு லண்டனில் உள்ள சட்டன் நகரில், உள்ளாட்சி மன்றக் குழு ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று மின்னஞ்சல்களையாவது தன்னார்வலர்களைக் கோரி அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை மே மாதத்தில் சர் கெய்ர் ஸ்டார்மரின் கட்சி 2,000 கவுன்சிலர்கள் வரை இழக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!