ஈரான்–துருக்கி தொடர்பு – போர் சமாதான முயற்சிகள் தீவிரம்
மத்திய கிழக்கு போரைத் தீர்ப்பதில் துருக்கி “ஆக்கப்பூர்வமான பங்கை” வகிக்க தயாராக உள்ளதென அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான தொலைபேசி உரையாடலில் , போரை முடிவுக்குக் கொண்டுவர துருக்கி மேற்கொண்ட முயற்சிகளை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாராட்டியதாக கூறப்படுகிறது.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டு செல்லும் இராஜதந்திர வழிமுறைகளைப் பின்பற்றும் நாடுகளில் துருக்கியும் ஒன்றாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, துருக்கி சவூதி அரேபியா மற்றும் எகிப்துடன் இணைந்து, பாகிஸ்தானில் நடைபெறும் பதற்றத்தை குறைக்கும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நேட்டோ உறுப்பினராகவும், ஈரானுடன் 300 மைல் எல்லை பகிர்ந்த அண்டை நாடாகவும் இருப்பதால், துருக்கி இந்த மோதலில் நுட்பமான, கவனமான பாதையில் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளது.





