செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை ( 28) அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 07 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் ( 28, 29) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் குறித்த பகுதிகளில் மிதமான மழையும், தென் தமிழக கடலோர‌ மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதலாம் திகதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையும்,
02 ஆம் திகதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியின் இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை நாளை (28) வழக்கத்தைவிட 7‌டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், 29, 30 ஆம் திகதிகளில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை 77 டிகிரி முதல் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!