இந்தியா செய்தி

இந்தியாவில் Lockdown? மத்திய அரசு கூறுவது என்ன?

இந்தியாவில் பொதுமுடக்கம் Lockdown அமுல்படுத்தப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி Hardeep Singh Puri திட்டவட்டாக இன்று (27) தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, கொரோனா காலத்தில்போன்று பொது முடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளது என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.

இந்நிலையிலேயே மேற்படி தகவல்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

‘‘ உலகளாவிய நிலைமை தொடர்ந்து நிலையற்றதாகவே உள்ளது.
எனவே, எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள், அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான களநிலவரங்களை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதில் இந்தியா தனது திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி உள்ளது. மேலும், நாங்கள் சரியான நேரத்தில், திட்டமிட்ட முறையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

இந்தியாவில் பொதுமுடக்கம் குறித்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. இதை நான் தெளிவாகக் கூறுகிறேன்.” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!