சர்வதேச அணுசக்தி முகமை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
ஈரானின் புஷெர் Bushehr அணுமின் நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலையடுத்து, சர்வதேச அணுசக்தி முகமை The International Atomic Energy Agency (IAEA) தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அணுமின் நிலையத்தில் அதிகளவிலான கதிரியக்கப் பொருட்கள் இருப்பதால், ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அது ஈரானுக்குள்ளும் அண்டை நாடுகளிலும் பெரிய அளவிலான கதிரியக்க விபத்தை உண்டாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒரு பேரழிவைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் மிக உயர்ந்த நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணுசக்தி முகமை வலியுறுத்துகிறது.





