ஜனாதிபதி ட்ரம்ப், பிரதமர் மோடி பேச்சு: அமைதி முயற்சி குறித்தும் ஆராய்வு!
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் இந்திய பிரதமர் Narendra Modi ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தொலைபேசி ஊடாகவே இன்று (24) இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலைத் தணித்து, அங்கு மீண்டும் அமைதியை நிலைநாட்டுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
உலகளாவிய பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை பாதுகாப்பாகவும் தடையின்றியும் பராமரிக்க வேண்டியதன் அவசியத்துவம் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
பிராந்திய அமைதியை நிலைநாட்ட இரு தலைவர்களும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.





