இங்கிலாந்தில் கால்நடை மருத்துவச் சேவைகளுக்கு விலை கட்டுப்பாடு – மருந்துச் சீட்டு கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இங்கிலாந்தில் கால்நடை மருத்துவ சேவைகளுக்கான கட்டணங்களை கட்டுப்படுத்தும் புதிய சீர்திருத்தங்களை போட்டி மற்றும் சந்தைகள் ஆணையம் (CMA) அறிவித்துள்ளது.
இதன்படி, கால்நடை மருத்துவர்களிடமிருந்து பெறப்படும் எழுத்துப்பூர்வ மருந்துச் சீட்டின் கட்டணம் £21 ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது.
கூடுதல் மருந்துகளுக்கு £12.50 என்ற உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படும்.
மேலும், கால்நடை மருத்துவமனைகள் தங்களின் சேவைகளுக்கான விரிவான விலைப்பட்டியல்களை
வெளியிட வேண்டும் என்றும், £500 ஐ விட அதிகமாக செலவாகும் சிகிச்சைகளுக்கு முன்கூட்டியே எழுத்துப்பூர்வ மதிப்பீடு வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு விலைகளை ஒப்பிட உதவும் வகையில், புதிய விலை ஒப்பீட்டு இணையதளம்
அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் தெளிவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க உதவும் என CMA தெரிவித்துள்ளது.
அதேவேளை, கால்நடை மருத்துவமனைகள் தாங்கள் சுயாதீனமா அல்லது பெரிய நிறுவனக் குழுவின் பகுதியாக
உள்ளனவா என்பதை வெளிப்படையாக அறிவிக்கவும் கட்டாயப்படுத்தப்படுகின்றன.
இந்த சீர்திருத்தங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





