இலங்கை செய்தி

ஈரானில் புதிய தேசிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்!

ஈரானின் உயரிய பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய செயலாளராக முகமது பாகர் சொல்காதர் Mohammad Bagher Zolghar நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பதவியை வகித்த அலி லாரிஜானி Ali Larijani கடந்த 17 ஆம் திகதி போரில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அலுவலகம் இந்த புதிய நியமனம் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

புதிய பொறுப்பை ஏற்கும் சொல்காதர், இதற்கு முன்பு ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் நீதித்துறையில் உயர்மட்ட பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர்.

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் இவருக்கு இருக்கும் நீண்டகால அனுபவம் இந்த நியமனத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

ஈரானின் உள்விவகாரத் துறை மற்றும் ஆலோசனை சபையிலும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!