உலகம் செய்தி

ஈரான் தாக்குதல்கள் – ஐ.நா மனித உரிமைகள் மன்றில் அவசர விவாதம்

வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றம்
நாளை புதன்கிழமை அவசர விவாதம் நடத்தவுள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் மற்றும் ஜோர்டான் சார்பில் பஹ்ரைன் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த விவாதம் நடைபெறுகிறது என மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த அமர்வின் போது, பஹ்ரைன், ஜோர்டான், குவைட், ஓமான், கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், பொதுமக்கள் மற்றும் பொது உட்கட்டமைப்புகளை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதனால் பரிதாப உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறும் வரைவுத் தீர்மானம் ஒன்றையும் நாடுகளின் குழு முன்வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!