கோப்ரா அவசரக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் நிலையில், அதனை எதிர்கொள்ள “கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வழிமுறையையும்”
பயன்படுத்துவது குறித்து பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள கோப்ரா அவசரக் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்படும் முக்கிய மேடையாக
கோப்ரா கூட்டங்கள் உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக ( Starmer) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
போர் காரணமாக மக்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டிருந்தார்.
பொதுவாக இராணுவ மற்றும் தூதரக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப் பயன்படுத்தப்படும் இந்தக் கூட்டத்தில்,
இம்முறை பொருளாதார தாக்கம் முக்கியமாக எடுத்துரைக்கப்படும் அவர் கூறினார்.
தற்போதைய சவாலான சூழ்நிலையில், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும்
எடுக்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.




