இந்தியா செய்தி

இந்தியாவில் 53 இலட்சம் மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது

இந்தியாவில் 53 இலட்சம் மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி மக்களவையில் இன்று உரை நிகழ்த்திய போதே இதனைக் கூறியுள்ளார்.

41 நாடுகளில் இருந்து இந்தியா எரிபொருள் இறக்குமதியில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில், நெருக்கடி காலங்களுக்காக கச்சா எண்ணெயைச் சேமித்து வைப்பதற்கு இந்தியா முன்னுரிமை அளித்துள்ளது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் தற்போது இந்தியா வசம் இ53 லட்சம் மெட்ரிக் டொன்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதென்றும் அதனை 65 இலட்சம் மெட்ரிக் டொன்களாக உயர்த்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!