இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

போர் நிறுத்தம்? ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்

போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்க மத்தியில், “பகைமைகளை முழுமையாகவும் முற்றிலுமாகவும் தீர்ப்பது” குறித்து அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக முன்பு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், ஹார்முஸ் நீரிணையை 48 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் திறக்காவிட்டால், ஈரானின் முக்கிய மின் நிலையங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிடும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

எவ்வாறாயினும் ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தாலும், அதனை ஈரான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!