பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி,450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 130 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.





