அராட் நகருக்கு நெதன்யாகு விஜயம் – அலட்சியமாக இருக்க வேண்டாமென மக்களுக்கு எச்சரிக்கை
தெற்கு இஸ்ரேலில் உள்ள அராட் (Arad) நகருக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அந்நகரை சனிக்கிழமை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதில் 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் எவரும் யாரும் உயிரிழக்காதது ஒரு அதிசயம் என நெதன்யாகு கூறியுள்ளார்.
அவர், ஏவுகணை எச்சரிக்கைகளை அவதானித்து, மக்கள் உடனடியாக பாதுகாக்கப்பட்ட தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டுமென வலியுறுத்துகிறார்.
கட்டிடங்களுக்கு இடையே ஏவுகணை வீழ்ந்தாலும், மக்கள் தங்குமிடங்களுக்கு சென்றிருந்தால் யாருக்கும் தீங்கு ஏற்பட்டிருக்காது என தெரிவித்துள்ளார்.
அலட்சியமாக இருக்காதீர்கள், அக்கறையின்றி இருக்காதீர்கள். முதல் எச்சரிக்கையைக் கேட்டவுடன் உடனடியாக பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு செல்லுங்கள்” என்றார்.




