ட்ரம்பின் உத்தரவையடுத்து தாக்குதலை நிறுத்தியது இஸ்ரேல்!
ஈரானின் முக்கிய எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu தெரிவித்தார்.
“தெற்கு பார்ஸ் எரிவாயு வளாகத்துக்கு எதிராக இஸ்ரேல் தனியாகவே செயல்பட்டது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது. போர் நாம் எதிர்பார்ப்பதை விட விரைவாக முடிவுக்கு வரும்.
ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது பாதுகாக்கிறோம்.
ஈரான் விஷயத்தில் நானும் ட்ரம்ப்பும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம் உலகம் ட்ரம்ப்புக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது.” என இஸ்ரேல் பிரதமர் மேலும் கூறினார்.




