பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்டாமர்-படோனெக் இடையே வாதப் பிரதிவாதம்
முன்னாள் அமைச்சரான பீட்டர் மண்டேல்சனின் (Peter Mandelson) புதிய நியமனம் குறித்து பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) அவருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினாரா என எதிர்க்கட்சித் தலைவர் கெமி படோனெக் (Kemi Badenoch) கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் அவர் இன்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது ஸ்டார்மர் இந்த கேள்வியைத் தவிர்த்து, மண்டேல்சனின் நியமன செயல்முறை போதுமான வலுவுடன் நடைபெறவில்லை என பதிலளித்தார்.
இதன்பின்னர் பிரதமர் தனது கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை படோனெக் குற்றம் சுமத்தினார்.
தொடர்ந்து இருவரிடையே வாதப் பிரதிவாதம் இடம்பெற்றுள்ளது.
மேலும் படோனெக்கின் ஈரான் தொடர்பான நிலைப்பாட்டை மீண்டும் விமர்சித்தார்.





