இலங்கை செய்தி

இலங்கையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

“மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்றது.

இதன்போது மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா, மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“போர் சூழ்நிலை எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதை தற்போது கணிக்க முடியாது. உக்கிர நிலை ஏற்பட்டால்கூட நெருக்கடி நிலையை முகாமை செய்வதற்குரிய வழிமுறைகளையே அரசாங்கம் தற்போது அமுல்படுத்தி வருகின்றது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!