‘மின்சாரம் விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை’
மின்சாரம் விநியோகத்தில் இதுவரை எந்தப் பிரச்சினைகளும் கண்டறியப்படவில்லை என்று எரிசக்தி எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் Arkham Ilyas தெரிவித்துள்ளார்.
நாடு வறட்சியை எதிர்கொள்ளவிருப்பதாகவும், இது நீர்மின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ்,
“ எரிசக்தி ஆதாரங்களைத் திறமையாக விநியோகிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்பார்க்கப்படும் மழைப் பற்றாக்குறை அல்லது நிலக்கரி ஏற்றுமதியில் தாமதம் காரணமாக, மின்சார விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படும் என இதுவரை கண்டறியப்படவில்லை.
நிலக்கரி கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில கப்பல்கள் தாமதங்களை அறிவித்துள்ளன.
எனினும், எரிசக்தி விநியோகத்தில் இதுவரை எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.





