வைத்தியர்களின் தேவைக்கேற்ப எரிபொருள் விநியோகம்
வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
சேவைத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் எரிபொருள் அளவைக் குறிப்பிடும் சுற்றறிக்கையொன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விசேடமான தொழில் பிரிவுகள் மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபடும் வாகனங்களும் உள்ள நிலையில் அவை தொடர்பான தனித்தனியான வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிப்படும் என்றும் அவர் கூறினார்.
இவை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியிடப்படும் என பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.





