துருக்கிய வான்வெளியில் ஈரான் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டது
ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையொன்று துருக்கிய வான்வெளிக்குள் நுழைந்தபோது, நேட்டோ பாதுகாப்பு அமைப்புகள் அதை அழித்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை துருக்கி வான்வெளிக்குள் நுழைந்ததையடுத்து, கிழக்கு மத்தியதரைக் கடலில் நிலைநிறுத்தப்பட்ட நேட்டோவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் அதை செயலிழக்கச் செய்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் சமூக ஊடக தளமான X இல் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நாட்டின் பாதுகாப்புக்கும் வான்வெளிக்கும் எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தீர்மானமாக எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.





