மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை நிறுத்துமாறு இலங்கை அழைப்பு!
“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தப்பட்டு, உலக அமைதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என அனைத்து தரப்புகளிடமும் கோருகின்றோம்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
“ எங்கு நடந்தாலும், எவர் நடத்தினாலும் போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
போரால் உயிரிழப்புகளும், சொத்து சேதங்களுமே ஏற்படுகின்றன. எனவே, உலக அமைதிக்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உலக அமைதி, பிராந்திய ஸ்தீரத்தன்மை மற்றும் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.” எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
உள்நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.





