சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சடுதியாக அதிகரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 10% இனால் அதிகரித்து, பீப்பாயொன்றின் விலை 80 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இந்தப் போர் பதற்றம் தொடரும் பட்சத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




