பாரிஸின் சிறந்த பேக்கரி உற்பத்தியாளர் : பரிசை வென்ற ஈழத் தமிழர்!
பாரிஸில் பேக்கரி தொழிலாளியாக பணியாற்றிவரும் 43 வயதான சித்தம்பரப்பிள்ளை ஜெகதீபன், 2026 ஆம் ஆண்டுக்கான கிராண்ட் பிரிக்ஸை வென்றுள்ளார்.
இதன்மூலம் அவர் 4000 யூரோ பணப்பரிசையும், ஒரு வருடத்திற்கு எலிசி அரண்மனைக்கு பாண் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
பிரான்ஸில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் சுவை, தரம், நேர்த்தி என்பவற்றை சோதனை செய்யும் இந்த போட்டியில் சுமார் 143 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.
சித்தம்பரப்பிள்ளை ஜெகதீபன் 2003 ஆம் ஆண்டு பிரான்சுக்கு சென்ற நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டுதான் பேக்கிங்கில் ஈடுபட்டார். முறையான பயிற்சி இல்லாமல் சுயமாக கற்று கைத்தேர்ந்தவரானார்.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து மனம் திறந்து பேசிய அவர்,”நான் போட்டியில் வெற்றி பெறுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை,” இது எனக்கு முதல் பங்கேற்பு, நான் முதல் முறையாக வென்றேன், மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.





