நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி: முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!
நௌபர் மௌலவி என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாவார் என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்றது.
இதன்போது அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டது தொடர்பில் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டார்.
மேற்படி கைது நடவடிக்கையானது நாட்டு மக்களை திசை திருப்பும் செயல் எனவும் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடக்கும் காலப்பகுதியில் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், சனல் 4 ஊடகம் கூறும் விடயங்களை நம்ப முடியாது எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.





