இலங்கை

யானையின் தாக்குதலினால் உயிரிழந்த அப்பாவி விவசாயி!!

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தபுர பகுதியிலுள்ள வீதியில் யானை தாக்கியதில் அப்பாவி விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் அதே பகுதியில் வசித்து வரும் கித்சிறி விஜேயபிரியந்த(59வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா (26) பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

யானை தாக்குதலுக்கு உள்ளான நபர் எரிபொருள் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு (25) 10.00 மணி அளவில் சென்றபோது வீதியில் நின்ற யானை அவரை அவ்விடத்தில் வைத்து தாக்கியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!