பிரித்தானியாவில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்பு – அறிமுகமாகும் புதிய சட்டம்
பிரித்தானியாவில் வறுமையானோர் மற்றும் வசதியான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையிலான
கல்வி வித்தியாசத்தை குறைக்க அரசு புதிய திட்டமொன்றை அறிவிக்க உள்ளது.
மாணவர்கள் மேல்நிலைப் பாடசாலையை முடிக்கும் காலப்பகுதிக்குள், கல்விச் சாதனை வித்தியாசத்தை பாதியாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது
புதிய கல்வி சீர்திருத்தங்கள் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் என
கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) தெரிவித்துள்ளார்.
விசேட கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களுக்கான ஆதரவு முறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சில மாணவர்களுக்கு வழங்கப்படும் EHCP (Education, Health and Care Plan) என்ற சட்ட ஆதரவு திட்டம் மறுபரிசீலனை செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலாக, பாடசாலைகள் நேரடியாக தனிநபர் ஆதரவுத் திட்டத்தை வழங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த மாற்றங்கள் சிறுவர்களின் உரிமைகளை பாதிக்கக்கூடும் என சில பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மைய தேர்வு முடிவுகள் ஏழை மற்றும் பணக்கார மாணவர்களுக்கிடையிலான வித்தியாசம் இன்னும் அதிகமாக இருப்பதை காட்டுகின்றன.
இந்த புதிய திட்டம் உண்மையில் அந்த வித்தியாசத்தை குறைக்குமா என்பது குறித்து அனைவரும் அவதானித்து வருகின்றனர்.





