நோர்வேயில் கூடுதல் துருப்புக்களை நிலைநிறுத்தும் பிரித்தானியா!
நோர்வேயில் தனது துருப்புக்களின் எண்ணிக்கையை 1,000 இருந்து 2,000 ஆக அதிகரிக்க பிரித்தானியா உத்தேசித்துள்ளது.
பனிப்போருக்குப் பிறகு ஆர்க்டிக் மற்றும் உயர் வடக்கின் பாதுகாப்புக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி ( John Healey) கூறியதை தொடர்ந்து துருப்புக்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வரும் மார்ச் மாதத்தில், ஆர்க்டிக் சென்ட்ரி பயிற்சியில் இங்கிலாந்து பங்கேற்கும் என்றும், இதற்காக 1500 துருப்புகள் அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில், இங்கிலாந்து தலைமையிலான பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டங்களைப் பற்றி விவாதிக்க ஹீலி பிரஸ்ஸல்ஸில் நேட்டோ சகாக்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
ஆர்க்டிக்கைப் பாதுகாப்பதிலும் நட்பு நாடுகளுடன் கூட்டுப் பயிற்சிகளை அதிகரிப்பதிலும் இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.





