இ.போ.ச பெண் நடத்துனர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்
இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) நியமிக்கப்பட்ட முதல் பெண் நடத்துனர்கள் இன்று (10) கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
புறக்கோட்டையில் இருந்து பெண் நடத்துனர்கள் தங்கள் கடமைகளை ஆரம்பித்தனர்.
அவர்கள் அரசுப் பேருந்துகளில் நடத்துனர்களாக அதிகாரப்பூர்வமாக தங்கள் பணிகளை இன்று தொடங்கினர்.
அண்மையில் மொத்தம் 19 பெண்கள் இலங்கை போக்குவரத்து சபை நடத்துனர்களாக நியமிக்கப்பட்டனர்.
நாட்டின் பேருந்து சேவை வரலாற்றில் பெண் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.




