பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் புதிய குடியேற்ற திட்டம் – தவிக்கும் குழந்தைகள்!
பிரித்தானியாவில் சட்டப்பூர்வ இடம்பெயர்வு விதிகள் குறித்த உள்துறை அலுவலகத்தின் புதிய திட்டங்களால் ஏறக்குறைய 300,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என சிந்தைனைக் குழுவொன்று எச்சரித்துள்ளது.
சட்டப்பூர்வ இடம்பெயர்வுதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தானியங்கி தீர்வு நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் பொதுவாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு அசேலம் கோரி விண்ணப்பிப்பார்கள். அவர்களின் பங்களிப்பை பொறுத்து கால அளவுகள் மாறுப்படும். சிலருக்கு 20 ஆண்டுகள் எடுக்கலாம்.
இந்த நீடித்த கால இடைவெளியானது, குடும்பங்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என்றும், ஒருங்கிணைப்பு, கல்வி வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் பொதுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IPPR) எச்சரித்துள்ளது.
அத்துடன் குழந்தை வறுமையை அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த செயற்திட்டம் புலம்பெயர்ந்தோருக்கு இழைக்கும் பாரிய அநீதி என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.





