தொழிற்கட்சி அரசாங்கத்தில் மற்றுமொரு இராஜினாமா!
எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களால் பிரித்தானியாவில் ஆளும் தொழிற்கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்ற நிலையில், மற்றுமொரு தலையிடியாக மேலும் ஒரு அதிகாரி பதவி விலகியுள்ளார்.
பிரதமரின் தகவல் தொடர்பு இயக்குநரான டிம் ஆலன் (Tim Allan) பதவி விலகுவதாக இன்று அறிவித்தார்.
அவரின் இராஜினாமா கடிதத்தில், புதிய எண் 10 அணியை உருவாக்க பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் பீட்டர் மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமித்தது தொடர்பாக அதிகரித்து வரும் அரசியல் அழுத்தம் காரணமாக மோர்கன் மெக்ஸ்வீனி (Morgan McSweeney) இராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது மற்றுமொருவரும் பதவி விலகியுள்ளார்.
இது தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு கடுமையான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.





