இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகளுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு பிரதம நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் அவர்இன்று (06) பிற்பகல்  ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட பணத்தை முறையற்ற வழிகளில் கையாள்வதற்கு  உதவியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!