இலங்கை செய்தி

டிட்வா புயல் தாக்கத்திற்கு மத்தியிலும், இலங்கையின் பொருளாதாரம் சிறந்த நிதி ஒழுக்கத்துடன் பேணப்பட்டு வருகிறது

டிட்வா (Ditwa) புயல் தாக்கத்திற்கு மத்தியிலும், இலங்கையின் பொருளாதாரம் சிறந்த நிதி ஒழுக்கத்துடன் பேணப்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (06) நடைபெற்ற “செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் யுகத்தில் பொருளாதார வளர்ச்சி” என்ற தலைப்பிலான மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

“மேலதிக செலவுகள், அரசாங்கத்தின் கடன் வாங்கல் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவதாக விவாதங்கள் நிலவிய போதிலும், கடந்த சில வருடங்களில் காணப்பட்ட சிறந்த வருமான ஈட்டல் மற்றும் நிதி ஒழுக்கம் காரணமாக இரண்டு அரச வங்கிகளிலும் ஒரு டிரில்லியன் ரூபாய் மேலதிக இருப்பை (Surplus) பேண முடிந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் அரச வங்கிகளில் ஒரு டிரில்லியன் ரூபாய் பற்றாக்குறை காணப்பட்ட போதிலும், தற்போது அது மேலதிக இருப்பாக மாறியுள்ளதுடன், இவ்வாறான பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ளும் போது அந்த நிதி பயனுள்ளதாக அமைந்தது.

அத்துடன் இந்தச் சேமிப்புகள் காரணமாக அரசாங்கம் மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை , இவ்வருடத்திற்குள் 8 பில்லியன் அமெரிக்க டொலர் பாதுகாப்பு கையிருப்பைக் கட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் தற்போது 2% இற்கு அண்மித்த மட்டத்தில் காணப்படுவதுடன், பணவீக்கத்தை 5% மட்டத்தைத் தாண்ட விடாமல் பேணுவதே தமது இலக்கு” என்றார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!