ICC T-20 உலகக்கிண்ண தொடர் நாளை ஆரம்பம்: முதல் நாளில் 3 ஆட்டங்கள்!
ICC T-20 உலகக்கிண்ண போட்டி தொடர் நாளை (07) கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலேயெ போட்டிகள் இடம்பெறவுள்ளன.
20 அணிகள் பங்கேற்றுள்ள தொடரின் முதல் நாளிலேயே ரசிகர்களை கவரும் வகையில் மூன்று முக்கியப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இலங்கையில் ஒரு போட்டியும், இந்தியாவில் இரு போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பு எஸ்.எஸ்.சி. SSC மைதானத்தில் ஆரம்பமாகும்
2ஆவது போட்டி இந்தியாவில் பிற்பகல் 3 மணிக்கு Eden Gardens ஆரம்பமாகும். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.
3 ஆவது போட்டி இரவு 7 மணிக்கு இந்தியா Wankhede மைதானத்தில் ஆரம்பமாகும். இப்போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோதுகின்றன.





