ICC U-19 உலகக்கிண்ணம் யாருக்கு? இன்று பலப்பரீட்சை!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரின் Under-19 World Cup இறுதி ஆட்டம் இன்று (06) நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 1 மணிக்கு ஆபிரிக்க நாடான சிம்பாப்பேயில் ஆரம்பமாகும்.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி போட்டி தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிவருகின்றது. தோல்வி எதையும் சந்திக்கவில்லை.
இங்கிலாந்து அணியும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. எனவே, இரு அணிகளும் சமபலத்துடன் மோதுகின்றன.
இந்திய அணி 5 தடவைகள் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தொடரில் வென்றுள்ளது. இம்முறையும் வெற்றிக் கிண்ணத்தை வெல்ல தீவிரம் காட்டும்.
இங்கிலாந்து அணி 2-வது முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் இன்று களமிறங்குகின்றது.அந்த அணி 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.





