ஆரோக்கியம் கேள்விக்குறி- மாசுபட்ட பால் குறித்து UK எச்சரிக்கை
பிரித்தானியாவில் மாசுபட்ட குழந்தை பால் காரணமாக, முப்பத்தாறு குழந்தைகளுக்கு உணவு விஷமாகிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
நெஸ்லே (Nestlé) மற்றும் டானோன் (Danone) நிறுவனங்கள் தயாரித்த சில குழந்தை பால் சூத்திரங்கள், செருலைடு (Cerulide) என்ற நச்சுப் பொருளால் மாசுபட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவை சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்த பாலை குடித்த குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரை எந்தக் குழந்தையும்
கடுமையாக நோய்வாய்ப்பட்டதாக தகவல் இல்லை என பிபிசி (BBC) தெரிவித்துள்ளது.
மொத்த 36 வழக்குகளில், 24 குழந்தைகள் இங்கிலாந்தில் பதிவாகியுள்ளனர்
இந்நிலையில் அவ்வாறான பால் தயாரிப்புகளை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்தி,
மாற்று பால் சூத்திரத்திற்கு மாறுமாறு உணவு தரநிலைகள் நிறுவனம்
பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள்
தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,
தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





