சிறப்பு வங்கி விடுமுறையை அறிவித்த ஸ்கொட்லாந்து அரசாங்கம்!
1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்காட்லாந்து அணி உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் வங்கி விடுமுறையை அறிவித்துள்ளது.
இதன்படி ஜூன் மாதம் 15 ஆம் திகதி அன்று வங்கி விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து ஆண்கள் தேசிய அணி ஜூன் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹைட்டிக்கு எதிரான முதல் போட்டியை இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 2 மணிக்கு தொடங்கும்.
இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முதல் அமைச்சர் ஜான் ஸ்வின்னி (John Swinney) மன்னரிடம் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
“இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க விளையாட்டு நிகழ்வு மட்டுமல்ல, ஸ்காட்லாந்து உலக அரங்கில் இடம்பிடிக்கவும், வணிக வளர்ச்சியை ஈர்க்கவும், நாட்டிற்குள் சுற்றுலா ஆர்வத்தை உருவாக்கவும், கலாச்சார மற்றும் விளையாட்டு தொடர்புகளை ஏற்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் கோரிக்கையை தொடர்ந்து வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனை சட்டம் 1971 இன் கீழ் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





