தீவிர அரசியலுக்கு விடை கொடுத்தார் மைத்திரி!
தான் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Maithripala Sirisena தெரிவித்தார்.
“தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கையில் பங்கேற்கவும் இல்லை.
எவரேனும் நாட்டுக்கு நன்மை செய்தால் அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றேன்.” எனவும் அவர் கூறினார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி SLFP ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்தவர் மைத்திரிபால சிறிசேன.
2014 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றவர்.
ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னரும் 2020 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் தெரிவானார்.
அரகலயவின் பின்னர் அரசியல் ரீதியில் மைத்திரி அநாதையாக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் அவரது மகன் போட்டியிட்டிருந்தாலும் வெற்றிபெறவில்லை.





